Wednesday, January 6, 2010

புது வெள்ளை மழை - ரோஜா

படு: புது வெள்ளை மழை
படம்: ரோஜா

பெண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெண்: நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது

------- ---- ---- ---- -------- ------- ---------- ------

ஆண்: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெண்: பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை
ஆண்: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
பெண்: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண்: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
பெண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது

--- ---- -------- ------- --- --------- --- -------- - -- -------- --


பெண்: நீ அனைய்கின்ற வேளையில் உயிர் பூ வெடுகென்று மலரும்
ஆண்: நீ வெடுகென்று ஓடினால் உயிர் பூ சருகாக உலரும்
பெண்: இரு கைகள் தீண்டாத பெண்மையை உந்தன் கண்கள் பந்தாடுதோ
ஆண்: மலர் மஞ்சம் காணாத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண்: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
ஆண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெண்: நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது
ஆண்: இந்த கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது
ஆண்: இந்த கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது ...

No comments:

Post a Comment