பாடல்: தனிமையிலே இனிமை காண முடியுமா
தனிமையிலே ...
தனிமையிலே இனிமை காண முடியுமா..
நல்லிரவினிலே சூரியன் தெரியுமா ... (தனிமையிலே) ..
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா ..
அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா... (துணை)
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா (2)
வெறும் மந்திரத்தில் மங்கை விழுந்திடுமா.. (தனிமையிலே)
பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்
கோடி படையுடனே பவனி வரும் காவலரும் ....(பனி)
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும் (2)
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆனாலும்...(தனிமையிலே)
No comments:
Post a Comment