MOVIE: Sumaithaangi
SONG: Manithan enbavan
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் (2)
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன்...
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
ஊரவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனிதன்..
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையைய் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்
மனிதன் ...
No comments:
Post a Comment