Movie: Paava manippu
Song: Kaalangalil aval vasantham
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள்.....
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்..
காலங்களில் அவள் ...
பால்போல் சிரிப்பதில் பிள்ளை- அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்பதில் அன்னை (2)- அவள்
கவிஞ்ஜன் ஆகினால் என்னை
காலங்களில் அவள்...
No comments:
Post a Comment