திரு உள்ளம் இறங்காதா
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ஆதி
இயற்றியவர் : கே. ராமராஜ்
பல்லவி
திரு உள்ளம் இறங்காதா ஸ்ரீ சபரி
கிரிஷா குருநாதா நின்
அனுபல்லவி
கருணை மழை பொழியும் கலியுக வரதா
தருணமரிந்தருளும் தயாநிதி நின்
சரணம்
புவிமீது பிறந்ததும் உன் புண்ணிய மஹிமை சொல்ல
கவிபாடிக் கனிந்திடும் என் நெஞ்சம் நெகிழும் மெல்ல
ஆவியகன்றிடும் நாள் வரையில் எந்தன்
நாவில் அமர்ந்து உன் புகழ் பாட அருள் செய்ய
மத்யமா காலம்
நிரந்தரம் உனது பதம் தரும் புனித
நிலை நினைந்தே உருகி நின்றேன்
அரும் தவம் என்றி அமர்ந்தருள் புரியும்
ஹரிஹர ஹம்சானந்த ஸ்வருப நின்
No comments:
Post a Comment